×

மங்காத்தா படம் ஓடும் தியேட்டரில் ரகளை செய்த தவெகவினரை அடித்து விரட்டிய அஜித் ரசிகர்கள்

சென்னை: தியேட்டரில் ரகளை செய்த தவெக தொண்டர்களை அஜித் ரசிகர்கள் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய படம் மங்காத்தா. இந்த படம் நேற்று ரீ-ரிலீசாகியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களிடையே பலத்த ஆதரவை பெற்று, வசூலை குவித்து வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த யோசித்த சில தவெக கட்சியினர், நேற்று செய்த செயலைப் பார்த்து பொதுமக்கள் முகம் சுழித்தனர். பலரும் அவர்களின் தரக்குறைவான செயலால் அல்லலுக்கு ஆளானார்கள். காரைக்குடியில் ஒரு தியேட்டரில் நேற்று மாலை மங்காத்தா படத்தை பார்க்க, பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் வந்திருந்தனர்.

அப்போது சட்டை கூட அணியாமல், தவெக கொடியை எடுத்துக்கொண்டு ஒரு கும்பல் தியேட்டர் வளாகத்துக்குள் நுழைந்தது. டிவிகே டிவிகே என கூச்சலிட்டபடி இருந்தனர். பிறகு விசிலை எடுத்து ஊத ஆரம்பித்துவிட்டனர். இந்த செயலை பார்த்து தியேட்டருக்கு வந்த பொதுமக்கள் பலரும் அவர்களை இங்கிருந்து செல்லும்படி சொன்னபோது, அவர்கள் கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது இதை அறிந்து வந்த அஜித் ரசிகர்கள், அவர்களை தியேட்டரிலிருந்து வெளியே போகும்படி கூறியும், தவெக தொண்டர்கள் சண்டைக்கு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, கைகலப்பு உண்டானது. உடனே அஜித் ரசிகர்கள் அநாகரீகமாக நடந்துகொண்ட தவெகவினரை அடித்து விரட்டினர். அவர்கள் அலறியபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதைப் பார்த்து பெண்கள், முதியர்கள் நிம்மதி அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Ajith ,Thaveka ,Mangatha ,Chennai ,Venkat Prabhu ,Tamil Nadu ,
× RELATED ஆன்லைன் சூதாட்டத்தில் சகோதரி பணம்...