×

ஹிப்ஹாப் ஆதியின் இசை நிகழ்வில் அனிருத்: சென்னையில் கொண்டாட்டம்

சென்னை: நேரலை நிகழ்ச்சி நிறுவனமான டார்க் என்டர்டெயின்மென்ட், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரிட்டர்ன் ஆப் தி டிராகன் மச்சி உலக சுற்றுப்பயணத்தின் இறுதி இசை நிகழ்ச்சியை சென்னையில் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்தி முடித்திருக்கிறது. இந்தியா முழுவதும் ஹிப் ஹாப் தமிழாவின் அனைத்து இசைக்கச்சேரிகளையும் டார்க் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த கூட்டணி, ஹிப் ஹாப் தமிழாவின் ரசிகர்களை கவரும் லைவ் நிகழ்ச்சிகளை உருவாக்க முக்கிய பங்கு வகித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக இருந்தது. ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் உலக சுற்றுப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக இது அமைந்ததுடன், அதன் பின்னர் ஆதி, சில காலம் கச்சேரி சுற்றுப்பயணங்களில் இருந்து ஓய்வு எடுக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த முக்கிய தருணத்தைக் காண ரசிகர்கள் பெருமளவில் திரண்டதால், நிகழ்ச்சி நடைபெறும் இடம் இசை, உற்சாகம் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டமாக மாறியது.

இந்த நிகழ்ச்சியில் 25,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டனர். மேலும், நிகழ்ச்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் ஒரு வாரத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்தது. அந்த இரவின் முக்கிய அம்சமாக, அனிருத் ரவிச்சந்தரின் சிறப்பு நிகழ்ச்சி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும், குஷ்பு சுந்தர் , சுந்தர் சி மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக மேடையில் தோன்றினர். அவர்கள் ஹிப்ஹாப் ஆதி உடன் இணைந்த தருணங்கள் ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் உயர்த்தி, அந்த இரவை மறக்க முடியாத இசை கொண்டாட்டமாக மாற்றின.

Tags : Anirudh ,Hip Hop Aadhi ,Chennai ,Dark Entertainment ,Hip Hop Tamil Aadhi ,Return of the Dragon Machi World Tour ,YMCA Grounds ,Hip Hop Tamil ,India ,
× RELATED காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்