சென்னை: டி.வி மூலம் பிரபலமாகி, தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ரச்சிதா மகாலட்சுமிக்கு வரும் மே மாதம் மறுமணம் நடப்பதாக தகவல் வெளியானது. டி.வி தொடரில் நடித்தபோது தினேஷுக்கும், ரச்சிதா மகாலட்சுமிக்கும் காதல் மலர்ந்தது. இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடுகள் காரணமாக தினேஷ், ரச்சிதா மகாலட்சுமி விவாகரத்து மூலம் பிரிந்தனர். அன்று முதல் சிங்கிளாக இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி, தனது மறுமணம் குறித்து அளித்த விளக்கம் வருமாறு: என்னை பற்றி அடிக்கடி வதந்திகள் பரவுகிறது. அதில் ஒன்றுதான், நான் மறுமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக வரும் வதந்தி. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் எனது திருமணத்தை பற்றிய பேச்சு வந்துவிடும். அது எந்த மே மாதம் என்று யாரும் சொல்வது இல்லை. எந்த மே மாதம் என்று எனக்கும் தெரியவில்லை. அடிக்கடி இதுபோல் வதந்திகள் வருவது வழக்கமாகி விட்டதால், அது என்னை எந்தவிதத்திலும் பாதிக்க விடுவது இல்லை.
