×

2 வருடத்துக்கு பிறகு நடிக்கும் ரைசா வில்சன்

 

சென்னை: ஆதி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் வெளியான ‘பார்ட்னர்’ திரைப்படத்தை தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா; பேஸ் ஒன் – தி அரைவல்’.இருபதுக்கும் மேற்பட்ட விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இயக்குநர் மைலோ இப்படத்தை இயக்குகிறார்.

கதையின் நாயகியாக ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன் நடிக்கிறார். ‘ஆண்மை தவறேல்’ துருவா, கன்னடத்தை சேர்ந்த அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகையான கிருத்திகா பிஸ்வாஸ், மலையாள நடிகர் ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், யூட்யூப் புகழ் ஃபைனலி ஸ்வாதிகா மற்றும் ஃபைனலி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவராஜ் சந்திரன் இசை. கிறிஸ்டோ பாப் ஒளிப்பதிவு. இயக்குனர் மைலோ கூறும்போது, ‘‘ஹாரர் சயின்ஸ் பிக்சன் சூப்பர் நேச்சுரல் ஃபேண்டஸி திரில்லர் படமாக இது உருவாகி உள்ளது. ஒரு ஜானருக்குள் இந்த கதையை அடக்கி விட முடியாது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார் ரைசா வில்சன்’’ என்றார்.

Tags : Raiza Wilson ,Chennai ,Royal Fortune Creations ,Aadhi ,Hansika Motwani ,Milo ,Aanmai Vanel' Dhruva ,Adviti Shetty ,Krithika Biswas ,Joe ,
× RELATED ஹிப்ஹாப் ஆதியின் இசை நிகழ்வில் அனிருத்: சென்னையில் கொண்டாட்டம்