- வரலக்ஷ்மி
- தணிக்கை பலகை
- சென்னை
- வரலட்சுமி சரத் குமார்
- பிரகாஷ் ராஜ்
- ப்ரியாமணி
- ஆடுகளம்
- கிஷோர்
- ராவ் ரமேஷ்
- ராதிகா
- நாசர்
- தேவன்
- சுஹாஸ்
சென்னை: நடிகையும், தயாரிப்பாளரும், சமூக ஆர்வலருமான வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம், `சரஸ்வதி’. இதில் வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, ‘ஆடுகளம்’ கிஷோர், ராவ் ரமேஷ், ராதிகா, நாசர் நடித்துள்ளனர். சமீபகாலமாக சில திரைப்படங்களின் தலைப்புகளில் கடவுள் பெயர்கள் இருந்தால், அப்படத்தின் தலைப்பை மாற்றச்சொல்லி சென்சார் போர்டு அறிவுறுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி சுஹாஸ் நடிப்பில் வெளியான `Hey Balwanth’ படத்துக்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த பெயர், `Hey Bhagawan’. இப்பெயரை மாற்ற வேண்டும் என்று சென்சார் போர்டு நெருக்கடி கொடுத்தது.
கடந்த ஆண்டு மலையாளத்தில் அனுபமா பரமேஸ்வரன், சுரேஷ் கோபி நடித்த ’Janaki vs State of Kerala’ என்ற படத்தின் பெயரில், ’ஜானகி’ என்பது கடவுள் சீதா தேவியை குறிப்பது போலிருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பியது. இப்படத்தில் ’ஜானகி’ என்ற பெயர் கொண்ட ஹீரோயின் கேரக்டர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர். எனவே, இரண்டு காட்சிகளில் ’ஜானகி’ என்ற பெயரை மியூட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. கடைசியில் படத்தின் பெயர் `JSK: Janaki V v/s State of Kerala’ என்று மாற்றப்பட்டது.
இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகியுள்ள `சரஸ்வதி’ என்ற படத்தின் தலைப்பில், ’சரஸ்வதி’ என்பது கடவுள் சரஸ்வதி தேவியை குறிப்பது போலிருக்கிறது என்று சென்சார் போர்டு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், `எஸ்.சரஸ்வதி’ என்று பெயரை மாற்றி படக்குழுவினர் சான்றிதழ் பெற்றனர். தொடர்ந்து சென்சார் போர்டு இதுபோன்ற பிரச்னைகளை முன்வைப்பதால், திட்டமிட்டபடி படங்களை வெளியிட முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சென்சார் போர்டின் கொள்கைக்கு எதிராக போராட, ஓரணியில் திரள வேண்டும் என்ற கோரிக்கை திரையுலகினர் மத்தியில் எழுந்துள்ளது.
