×

ரவி மோகன் இயக்கத்தில் ஹீரோவான யோகி பாபு

சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘அன் ஆர்டினரி மேன்’. இதில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கிறார். ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் ரவி மோகன், கெனீஷா இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நகைச்சுவை மற்றும் சமூக கருத்துகளை இணைக்கும் படமாக இது உருவாகிறது. ஹைட்ரோ இசை அமைக்க, விவான் ஆம்பரோஸ் ஒளிப்பதிவு செய்கிறார். சவுந்தர் அரங்கம் அமைக்கிறார். தற்போது ‘ஜீனி’, ‘கராத்தே பாபு’, ‘மிருதன் 2’, ‘ப்ரோ கோட்’ ஆகிய படங்களில் ரவி மோகன் நடித்து வருகிறார்.

Tags : Yogi Babu ,Ravi Mohan ,Chennai ,Kenisha ,Ravi Mohan Studios ,Hydro ,Vivaan Ambrose ,Soundar ,Babu ,
× RELATED காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்