×

விஷால் ஜோடியானார் தமன்னா

சென்னை: விஷால் மற்றும் இயக்குனர் சுந்தர்.சி இணைந்து புதிய திரைப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்தப் படத்துக்கு ‘புருஷன்’ என தலைப்பிட்டுள்ளனர். இதன் டைட்டில் புரோமோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விஷால் உடன் தமன்னா மற்றும் நடிகர் யோகி பாபு நடிக்கின்றனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். ஏசிஎஸ் அருண் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். திரைக்கதை மற்றும் வசனத்தை வெங்கட் ராகவன் எழுதி உள்ளார்.

ஒளிப்பதிவாளராக கோபி அமர்நாத் பணியாற்றுகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சுமார் 5.41 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த புரோமோவில் விஷால், தமன்னா மற்றும் யோகி பாபு நடித்துள்ள ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. வழக்கமாக சுந்தர்.சி படம் என்றால் அது கமர்ஷியல் படமாகவே இருக்கும். அதை இந்த படத்தின் புரோமோ உறுதி செய்துள்ளது. காமெடி, ஆக்‌ஷன் ஷாட்கள் இந்த புரோமோவில் இடம்பெற்றுள்ளது.

Tags : Vishal ,Tamannaah ,Chennai ,Sundar.C ,Yogi Babu ,Tamizha Aadhi ,ACS ,Arun Kumar ,Venkat Raghavan ,Gopi Amarnath ,
× RELATED ரசிகர்களை கவலைப்பட வைத்த திரிஷா