×

மேலும் உடல் மெலிந்த திரிஷா: உடல் நிலை பாதிப்பா?

சென்னை: தமிழில் சூர்யாவுடன் ‘கருப்பு’, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ‘விஷ்வம்பரா’, மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ராம்’ ஆகிய படங்களில் நடிக்கும் திரிஷா, எப்போதுமே தனது உடல் எடையை நன்கு பராமரிப்பார். தற்போது துபாய் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்து வரும் அவர், அங்குள்ள ஜிம்மில் எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் உடல் மெலிந்து காணப்படுகிறார்.

‘பொன்னியின் செல்வன்’, ‘தக் லைஃப்’ போன்ற படங்களில் அழகான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்த திரிஷா, இந்த போட்டோவில் ஸ்லிம்மாக, மிகவும் வித்தியாசமாக தெரிகிறார். அதை பார்த்த ரசிகர்கள், ‘எதற்காக இப்படி உடல் மெலிந்துவிட்டீர்கள்? திடீரென்று பார்க்கும்போது, உடல்நிலை பாதிக்கப்பட்டவர் போல் இருக்கிறீர்கள்’ என்று தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.

Tags : Trisha ,Chennai ,Chiranjeevi ,Mohanlal ,Dubai ,
× RELATED ரசிகர்களை கவலைப்பட வைத்த திரிஷா