பெங்களூரு: திரையுலகின் வளர்ந்து வரும் நட்சத்திரம் ருக்மிணி வசந்த் மற்றும் புகைப்படக் கலைஞர் சித்தார்த் நாக் ஆகிய இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியுள்ளன. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி, கன்னடத்தில் காந்தாரா லெஜெண்ட் படங்களில் நடித்தவர் ருக்மிணி வசந்த். இவருக்கு அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் கிடைத்துள்ளன. சமீபத்தில் ருக்மிணி வசந்த் மற்றும் சித்தார்த் நாக் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதைக் கண்ட ரசிகர்கள், இவர்கள் இருவரும் ரகசியமாக டேட்டிங் செய்து வருகிறார்களா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். சித்தார்த் நாக் ஒரு பிரபலமான புகைப்படக் கலைஞர். இவர் ருக்மிணி வசந்த் நடித்த பல படங்களின் புரமோஷன் மற்றும் போட்டோஷூட்களில் பணியாற்றியுள்ளார். ருக்மிணியின் சமூக வலைத்தளப் பக்கங்களில் உள்ள பல அழகான புகைப்படங்களை எடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை ருக்மிணி வசந்தோ அல்லது சித்தார்த் நாகோ இந்த தகவல் குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.

