சென்னை: திங்க் ஸ்டுடியோஸ் தயாரிக்க, கென் ராய்சன் இயக்கத்தில் கவின், பிரியங்கா மோகன் ஜோடி சேர்ந்து நடிக்கும் புதிய படத்தில், முக்கிய கேரக்டரில் நடன இயக்குனர் சாண்டி ஒப்பந்தமாகியுள்ளார். அதற்கான போஸ்டரில் கவின், சாண்டி இருவரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி, ‘பாய்ஸ் ஆர் பேக்’ என்று அறிவித்துள்ளனர். ஓஃப்ரோ இசை அமைக்கிறார். ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி ஜானரில் படம் உருவாகிறது. ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.

