மும்பை: நடிகர் தனுஷ் – நடிகை மிருணாள் தாக்கூர் திருமணம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெற இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக இரு தரப்பிலிருந்தும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தனுஷுக்கு நெருக்கமான இயக்குனர் அளித்துள்ள தகவல் உண்மையை வெளிக்கொண்டுவந்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் இந்தியில் தனுஷ் நடித்த தேரே இஷ்க் மே படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “இப்படியொரு திருமணம் நடைபெறுவதாக தனுஷ் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. நாங்கள் தினமும் செல்போனில் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். யாருக்கும் தெரியாமல் அவர் எப்படி திருமணம் செய்துகொள்வார்?” என்றார். இதன் மூலம் இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

