×

அர்ஜுன் தாசின் கான் சிட்டி

சென்னை: முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தில் அர்ஜூன் தாஸ், மலையாள நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.

Tags : Arjun Dasin Khan ,Chennai ,Lokesh Kanakaraj ,Arjun Das ,Anna Ben ,Yoqibabu ,Churukarasi ,Achilan ,Power House Pictures ,HARISH DURAYRAJ ,
× RELATED சாந்தனு, அஞ்சலி நாயரின் மெஜந்தா டீசர் வெளியீடு