இந்தியாவின் முதல் கொரோனா நோயாளியான திருச்சூர் மாணவிக்கு மீண்டும் தொற்று உறுதியானது!!

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதன் முதலாக கொரோனா உறுதி செய்யப்பட்ட வூகானில் இருந்து திரும்பி வந்த திருச்சூர் மாணவிக்கு மீண்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கொரோனாவின் பிறப்பிடமாக சீனாவின் உகான் கருதப்படுகிறது. இங்கிருந்து தான் கொரோனா உலகம் முழுவதும் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது. உகானில் கொரோனா பரவியதை தொடர்ந்து அங்கிருந்த வெளிநாட்டினர் வெளியேறினர். அப்போது, கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு மாணவி உகானில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் கடந்த வருடம் ஜனவரி 31ம் தேதி கேரளா திரும்பினார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார். இந்நிலையில் அந்த மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் சேருவதற்காக டெல்லிக்கு செல்ல தீர்மானித்து இருந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. தற்போது அந்த மாணவி திருச்சூரில் உள்ள வீட்டில் தனிமையில் உள்ளார்….

The post இந்தியாவின் முதல் கொரோனா நோயாளியான திருச்சூர் மாணவிக்கு மீண்டும் தொற்று உறுதியானது!! appeared first on Dinakaran.

Related Stories: