செல்போன்கள், லேப்டாப் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது

ஆவடி: ஆவடி பகுதியில் உள்ள வீடுகளில் லேப்டாப், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் அடிக்கடி திருடுவதாக ஆவடி காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தன. இன்ஸ்பெக்டர் காளிராஜ், எஸ்.ஐ கோகிலா ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடினர். இதில்,  குற்றவாளிகள் பயன்படுத்தி வந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக தேடினர்.அதில் பட்டாபிராம், பிருந்தாவன் காலனியை சேர்ந்த விக்னேஷ்(20), அவரது தம்பி நவீன்(19) ஆவடி, கன்னிகாபுரம், மேட்டு தெருவை சேர்ந்த திருமாறன்(21), அரக்கோணம், புதுப்பேட்டை சேர்ந்த சத்யா(21) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர், போலீசார் தலைமறைவாக இருந்த 4 பேரையும் நேற்று  சுற்றி வளைத்து பிடித்தனர். இதன் பிறகு, போலீசார் அவர்களை ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து 2 லேப்டாப், 2 செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்….

The post செல்போன்கள், லேப்டாப் திருடிய சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: