3 புதிய படங்களில் மாஸ்டர் மகேந்திரன்

குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது மாஸ்டர் மகேந்திரன் என்று அழைக்கப்பட்டவர் மாஸ்டர் படத்தின் மூலம் புகழ்பெற்றதால் மீண்டும் மாஸ்டர் மகேந்திரன் என்றே அழைக்கப்படுகிறார். அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. தற்போது 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பவானி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ராஜேஷ்குமார் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் அவதார் இயக்கத்தில், கரா படத்தில் நடிக்கிறார். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறர், அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். இதேபோல் பீப்பிள் புரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிக்கும் அமிகோ காரேஜ் படத்திலும் நடிக்கிறார். பிரசாந்த் நாகராஜன் இயக்கும் இந்த திரைப்படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைக்கிறார்.

விஜயகுமார் சோலைமுத்து ஒளிப்பதிவு செய்கிறார். நா.அருண் கார்த்திக் தயாரிப்பில் உருவாகும் ரிப்பப்பரி எனும் படத்திலும் நடிக்கிறார். காவ்யா அறிவுமணி, ஆர்த்தி உள்பட பலர் நடிக்கிறார்கள். அருண் கார்த்திக் தயாரிக்கிறார், தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார். திவாகரா தியாகராஜன் இசை அமைக்கிறார்.

Related Stories: