தியேட்டருக்கு வருகிறாள் குட்லக் சகி

பென்குயின், மிஸ் இந்தியா படங்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்துள்ள படம் குட்லக் சகி. நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேசுடன் ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் தெலுங்கில் தயாராகி இருந்தாலும் தமிழ், மலையாளத்திலும் வெளிவருகிறது.  கடந்த ஆண்டு ஜூன் மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கொரோனா பரவல் காரணமாக தள்ளி போடப்பட்டு வந்தது. படம் ஓடிடியில் வெளிவரப்போவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில்  படம் வரும் ஜனவரி 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related Stories: