ஹிப்ஹாப் ஆதி நடித்து ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள படம் அன்பறிவு. இந்த படத்தில் பசுபதி எனும் வில்லன் வேடத்தில் முதன் முறையாக நடித்துள்ளார் விதார்த். அஷ்வின் ராம் இயக்கியுள்ளார். ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத் ஆகியோருடன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் வில்லனாக நடித்திருப்பது குறித்து விதார்த் கூறியிருப்பதாவது: இந்தப்படத்தின் ஆரம்ப கட்டத்தில், இயக்குநர் அஷ்வின் ராம் என்னை எதிர்மறையான கதாபாத்திரத்தில் எப்படி கற்பனை செய்தார் என்று நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன். நான் இதுவரை பணியாற்றிய பெரும்பாலான கமர்ஷியல் மற்றும் கலை படங்களில், எனது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மென்மையானவையாகவே இருக்கும். இருப்பினும், அஷ்வின் திரைக்கதையை விவரித்தபோது, இந்த பாத்திரம் எனது திறனை வேறு பரிமாணத்தில் காட்ட உதவும் என்று நான் நம்பினேன்.