×

2 பாகமாக உருவாகும் மாண்புமிகு பறை: இயக்குனர் தகவல்

சென்னை: சியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபா, சுரேஷ் ராம் கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ள படம், ‘மாண்புமிகு பறை’. எஸ்.விஜய் சுகுமார் இயக்க, தேவா இசை அமைத்துள்ளார். ஜெ.எஃப்.நக்கீரன், கவிதா இணை தயாரிப்பு செய்துள்ளனர். திண்டுக்கல் ஐ.லியோனி மகன் லியோ சிவகுமார், காயத்ரி ரெமா, கஜராஜ், சேரன் ராஜ், ரமா, அசோக்ராஜா, நடித்துள்ளனர். வரும் டிசம்பர் 12ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலரை தொல்.திருமாவளவன், திண்டுக்கல் ஐ.லியோனி, கே.பாக்யராஜ், தேவா இணைந்து வெளியிட்டனர்.

படம் குறித்து காயத்ரி ரெமா பேசுகையில், ‘இசைக்கருவிகளின் தாய் பறை. எல்லா செய்திகளையும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கும் மற்றும் திருவிழாவிற்கும், விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் பறைதான் அடிப்படை. அந்த பறை இசையின் பெருமையை பேசும் இப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது எனக்கு கிடைத்த பெருமை’ என்றார். எஸ்.விஜய் சுகுமார் பேசும்போது, ‘இப்படம் 2 பாகங்களாக உருவாகிறது. முதல் பாகத்தில் பறை இசை கலைஞர்களின் வாழ்க்கையையும், இரண்டாம் பாகத்தில் பறை இசை எத்தனை வகைப்படும் என்பதையும் சொல்ல திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் பறை இசையை உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்கத்தில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம்’ என்றார்.

Tags : Chennai ,Subha ,Suresh Ram ,Siya Productions ,S.Vijay Sukumar ,Deva ,J.F. Nakkheeran ,Kavita ,Dindigul I.Leoni ,Leo Sivakumar ,Gayathri Rema ,Gajaraj ,Cheran Raj ,Rama ,Ashok Raja ,Thol.Thirumavalavan ,K. Bhagyaraj ,
× RELATED மாண்புமிகு பறை விமர்சனம்…