×

மாநாடு வசூல் 117 கோடி: தயாரிப்பாளர் தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு, கடந்த நவம்பர் மாதம் வெளியானது.  இதில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரிதர்ஷன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் 117 கோடி ரூபாய் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் சிம்பு, வெங்கட்பிரபு, யுவன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

படம் எத்தனை கோடி வசூலித்தாலும் அதனால் எனக்கு லாபம் இல்லை. படத்தை வாங்கி விநியோகத்தவர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்குமே லாபம் என்று சுரேஷ் காமாட்சி முன்பு குறிப்பிட்டிருந்தார்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!