செங்குன்றம் இ-சேவை மையத்தில் கொள்ளையடித்த 3 பேர் சிக்கினர்: 5 லட்சம் பறிமுதல்

திருவொற்றியூர்: செங்குன்றம் இ-சேவை மையத்தில் கொள்ளையடித்த 3 பேரை கைது செய்தனர். சென்னை செங்குன்றம், மொண்டியம்மன் நகர் கோயில் தெருவை சேர்ந்தவர்  செந்தில்குமார் (47). இவர் தனது வீட்டின் மாடியில் இ-சேவை மையம் நடத்தி வருகின்றார். கடந்த 9ம் தேதி மையத்தை பூட்டிவிட்டு மறுநாள் காலை மீண்டும் திறக்க வந்தபோது சேவை மையத்தின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த 15 லட்ச ரூபாய் மற்றும் செல்போன் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.இதுபற்றி செந்தில்குமார் கொடுத்த புகாரின்படி, செங்குன்றம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து சம்பவ நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து  விசாரணை மேற்கொண்டு வந்தார். இதில், திருநெல்வேலியை சேர்ந்த மகேந்திரன் (39) என்பவர் தனது நண்பர்களான திருநெல்வேலி தெற்கு பழவூரை சேர்ந்த மாரிசெல்வம் (22), சீர்காழி வடக்கல்  கிராமத்தை சேர்ந்த தயாளன் (22) ஆகியோருடன் சேர்ந்து இ-சேவை மையத்தில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

The post செங்குன்றம் இ-சேவை மையத்தில் கொள்ளையடித்த 3 பேர் சிக்கினர்: 5 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: