மாநாடு படத்தால் எனக்கு லாபம் இல்லை: தயாரிப்பாளர் சொல்கிறார்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன்  நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த படம் பல கோடி வசூலித்துள்ளது. இத்தனை கோடி லாபம் என்றெல்லாம் தகவல் பரவியது. ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மாநாடு படத்தால் எனக்கு லாபம் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: மாநாடு படத்தை வாங்கிய தியேட்டர்கள், டிஜிட்டல் உரிமம்  பெற்றவர்களுக்குத்தான் லாபம் எனக்கு லாபம் இல்லை. சிம்புவின் முந்தைய படங்கள் வெற்றி பெற்றிருந்தால்தான் எனக்கு லாபம் கிடைத்திருக்கும். இனி வரும் சிம்பு படங்கள் லாபம் சம்பாதிக்கும். இதற்காக நான் யாரையும் குறை சொல்ல மாட்டேன். என்று கூறியிருக்கிறார், சுரேஷ் காமாட்சி.

Related Stories:

More