மணி ஹீஸ்ட் டீமின் அடுத்த படைப்பு.!

உலகம் முழுவதும் சக்கை போடு போட்ட வெப்சீரிஸ் மணி ஹீஸ்ட். இதன் கடைசி பாகம் நாளை வெளியாகிறது. இத்துடன் மணி ஹீஸ்ட் சீரிஸ் முடிவடைகிறதே என வருத்தம் அடைந்த ரசிகர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி இருக்கிறது. மணி ஹீஸ்ட் நிறைவு பெற்றாலும் அதில் வந்த பெர்லின் என்ற கேரக்டரை வைத்து புதிய தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த வெப்தொடருக்கு பெர்லின் என்றே தலைப்பு சூட்டியுள்ளனர்.

பெர்லின் கேரக்டர் இனி என்ன செய்யப்போகிறது என்பதை இந்த தொடரில் பார்க்கலாம். ஆனால் இது மணி ஹீஸ்ட் போல, திரில்லர் ஜானரில் உருவாகுமா இல்லையா என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ். இந்த தொடர், 2023ம் ஆண்டுதான் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளது. மணி ஹீஸ்ட்டில் பெர்லினாக நடித்த பெட்ரோ அலன்ஸோ, பெர்லின் வெப்சீரிஸிலும் நடிக்க உள்ளார். மணி ஹீஸ்ட் டீமே இந்த வெப்சீரிஸையும் உருவாக்க உள்ளது.

Related Stories: