கல்யாணியின் ஷாக் தோற்றம்.!

மாநாடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகள். தெலுங்கு, மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். பிரியதர்ஷன் இயக்கத்தில் பல மொழிகளில் திரைக்கு வரும் மரைக்காயர் அரபிக்கடலின்டே சிம்ஹம் படத்திலும் கல்யாணி நடித்துள்ளார். தற்போது ஸ்லிம் தோற்றத்தில் அழகாக காட்சியளிக்கும் கல்யாணி, சில வருடங்களுக்கு முன் இதுபோல் இல்லை.

உடல் எடை கூடி, குண்டு பெண்ணாக இருந்தார். இது பற்றி அவர் கூறும்போது, ‘சிறு வயது முதல் குண்டாக இருப்பேன். இளம் வயதிலும் என்னால் உடல் எடையை குறைக்க முடியாமல் தவித்தேன். அதிகம் நொறுக்கு தீனி சாப்பிட்டு வந்ததே இதற்கு காரணம். அதையெல்லாம் நிறுத்திவிட்டு, தொடர்ந்து டயட், ஜிம் என என்னை மாற்றிக்கொண்ட பிறகே உடல் இளைத்தேன்’என்கிறார் கல்யாணி.

Related Stories: