கீர்த்தியின் கனவு நிறைவேறியது

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் வாஷி என்ற படத்தில் நடிப்பதை பெருமையாக சொல்கிறார். காரணம், இப்படத்தின் தயாரிப்பாளர் அவரது தந்தை சுரேஷ் குமார். இவர் மலையாளத்தில் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்தவர், ஓரிரு படங்களில் நடித்தவர், நடிகை மேனகாவின் காதல் கணவர். வாஷி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறுகையில், ‘வாஷி என்றால், கோபம் என்று பொருள். ரசிகர்கள் நினைப்பதை விட, என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான படம் இது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

என் தந்தை தயாரிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. தந்தை தயாரிக்கும் படம்தானே, வாய்ப்பு ரொம்ப சுலபமாக அமைந்துவிடும் என்று ரசிகர்கள் நினைக்கலாம். ஆனால், இந்த வாய்ப்பு சாதாரணமாக அமைந்துவிடவில்லை. சுமார் ஏழு வருடங்களுக்குப் பிறகு என் கனவு இப்போது நனவாகியுள்ளது. டொவினோ தாமஸ் ஹீரோவாக நடிக்கிறார். எனது பள்ளிக்கால நண்பர் விஷ்ணு ஜி.ராகவ் இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிவிட்டது’ என்றார்.

Related Stories: