பெங்காலி நடிகைக்கு கொலை மிரட்டல்: வாலிபர் அதிரடி கைது

கொல்கத்தா: பெங்காலி நடிகை அருணிமா கோஷூக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை மேற்குவங்க போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பெங்காலி நடிகை அருணிமா கோஷ், லால்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கர்பா பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக வாலிபர் ஒருவர் நடிகை அருணிமா கோஷை மிரட்டி வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு குற்றம் சாட்டப்பட்ட அந்த வாலிபர், நடிகையின் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார். அந்த வாலிபருக்கும், நடிகைக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரித்து வருகிறோம்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக அருணிமா கோஷை அந்த வாலிபர் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாச வார்த்தைகளால் திட்டுவது மட்டுமின்றி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். அதையடுத்து அந்த வாலிபர் மீது துன்புறுத்தல், அநாகரீகமாக நடந்து கொள்ளுதல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  கர்பா பகுதியை சேர்ந்த அவரை தற்போது கைது செய்து விசாரித்து வருகிறோம். இந்த வாலிபர் ஏற்கனவே இரண்டு முறை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்’ என்று அவர்கள் கூறினர்.

Related Stories:

More