இன்று இரவு 7 மணிக்கு வெளியாகிறது அஜித் நடிக்கும் வலிமை படத்தின் Second Single: அஜித் ரசிகர்கள் ஹேப்பி

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் இரண்டாவது முறையாக இணையும் திரைப்படம் வலிமை. இப்படம் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் வெளிவர உள்ளது. வலிமை படத்தின் முதல் சிங்கிள் நாங்க வேற மாறி நாங்க வேற மாதிரி வெளியாகி பட்டையைக் கிளப்பிய நிலையில் இப்பொழுது இரண்டாவது சிங்கிள் குறித்த முக்கிய அப்டேட் தற்போது கிடைத்துள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவான நேர்கொண்டபார்வை மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்த முறை பக்கா அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு வலிமை என்ற பவர்ஃபுல்லான டைட்டில் வைத்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளதாகவும் அதேசமயம் பைக் ரேஸராக பல காட்சிகளில் தோன்ற உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். காலா புகழ் ஹுமா குரேஷி கதாநாயகியாக நடித்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கும் நிலையில் அடுத்த அப்டேட்டை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.

Related Stories: