குற்றப்பின்னணி கொண்டவர்கள் வேட்டை; ஒரே இரவில் 9,000 பேர் கைது: ம.பி. போலீஸ் நடவடிக்கை

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் நோக்கத்துடன், அந்த மாநிலம் காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த சனிக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை இடைப்பட்ட ஒரே இரவில், சுமார் 9,000 குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘மாநிலம் முழுவதும் உள்ள குற்றவாளிகளை, கைது செய்ய ஆணை பிறப்பித்தும் கைது செய்யப்படாமல் இருந்தவர்கள், குற்றம்சாட்டப்பட்டவர்கள் என மூத்த அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையில் 9,000 பேர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களில் கைது வாரண்ட் நிலுவையில் உள்ள குற்றவாளிகள் சுமார் 6,000 பேர். ஜாமினில் வெளிவர முடியாத குற்றவாளிகள் 2,600 பேர். தேடப்படும் குற்றவாளிகள் சுமார் 100 பேர், பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 200 பேர் ஆகியோர் அடங்குவர். பல்வேறு மாவட்டங்களில் 1,000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் பின்னணி குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post குற்றப்பின்னணி கொண்டவர்கள் வேட்டை; ஒரே இரவில் 9,000 பேர் கைது: ம.பி. போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: