நயன்தாராவுக்கு திடீர் சிபாரிசு

தமிழில் அட்லி இயக்கத்தில் ‘ராஜா ராணி’, ‘பிகில்’ ஆகிய படங்களில் நடித்தவர், நயன்தாரா. தற்போது அட்லி இந்தியில் இயக்கும் படம், ‘லயன்’. இதை ரெட் சில்லீஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார், ஷாருக்கான். படத்தில் அவர் ஏற்றிருப்பது இரட்டை வேடம். ஒரு வேடத்துக்கு நயன்தாரா, இன்னொரு வேடத்துக்கு பிரியாமணி ஜோடியாக நடிக்கின்றனர். புனேயில் முதற்கட்டப் படப்பிடிப்பு நடந்தது.

இந்நிலையில், திடீரென்று இப்படத்தில் இருந்து நயன்தாரா விலகியதாகவும், அவருக்குப் பதிலாக சமந்தா நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இப்படத்தில் நடிக்க சமந்தாவை அழைக்கவில்லை என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது. எனவே, நயன்தாரா நடிப்பது உறுதி என்றும், ஷாருக்கான் மனைவி கவுரி கான், நயன்தாராவுக்கு அதிக சிபாரிசு செய்கிறார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளது.

Related Stories: