கால்பந்து கதையில் அனிகா

வெற்றி நடிப்பில் வெளியான ‘ஜீவி’ படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்த பாபு தமிழ் இயக்கியுள்ள படம், ‘க்’. தர்மராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளனர். கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அவினாஷ் கவாஸ்கர் இசை அமைத்துள்ளார். தனது முதல் பெரிய போட்டியிலேயே பலத்த காயம் அடையும் கால்பந்து வீரரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், அதன்மூலம் கிடைக்கும் நுட்பமான தகவல்கள் மற்றும் தனக்கு ஏன் இப்படி நடந்தது? எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என்று ஆராயும்போது கிடைக்கும் அதிரடி தகவல்களை மையமாக வைத்து, உளவியல் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், வரும் டிசம்பர் 10ம் தேதி திரைக்கு வருகிறது.

Related Stories: