பூஜா கனவு நிறைவேறியது

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பிசியாக நடித்து வருகிறார், பூஜா ஹெக்டே. தமிழில் 2012ல் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக ‘முகமூடி’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் ஜோடியாக ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் சிரஞ்சீவி, பிரபாஸ், மகேஷ் பாபு, அல்லு அர்ஜூன், ஜூனியர் என்டிஆர், பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் ஆகியோருடன் நடித்துள்ள அவர், தனது பல வருட கனவு தற்போது நனவாகி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதாவது, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் இப்போது நிறைவேறியுள்ளது. ‘இந்தியில் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். இப்படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

More