திருமணம் பற்றி ஸ்ருதிஹாசன்

எல்லா விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர், ஸ்ருதிஹாசன். தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக ஒரு படத்திலும், பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், தன் காதலன் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘சினிமா நடிகையாக இருப்பதால், இதற்கு முன்பு சில விஷயங்களை வெளியே சொல்லாமல் மறைத்தேன். சில வருடங்களாக நான் சிங்கிளாக இருந்தேன். இப்போது சாந்தனு ஹசாரிகாவை உயிருக்குயிராக காதலிக்கிறேன். ஆங்கில நாவல்கள், பெயிண்டிங், கிராபிக்ஸ் போன்ற விஷயங்களில் எனது எண்ணமும், அவரது எண்ணமும் ஒரேமாதிரி இருந்ததால் ஒருவரை ஒருவர் விரும்பினோம். என் தோழிக்கு பெயிண்டிங் பரிசளித்தபோது அவர் எனக்கு அறிமுகமானார். பிறகு ஆன்லைனில் பேசினோம். நிறைய விஷயங்களில் எங்கள் எண்ணம் ஒரேமாதிரி இருந்ததால் காதலிக்க தொடங்கினோம். பிற்காலத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்வோமா என்று தெரியாது’ என்றார்.

Related Stories:

More