காமெடி செய்யும் தன்ஷிகா

‘பேராண்மை’, ‘கபாலி’ போன்ற படங்களில் பார்த்த சாய் தன்ஷிகாவை மீண்டும் தமிழில் பார்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், தெலுங்கில் முழுநீள காமெடி படத்தில் நடித்து முடித்துள்ள சாய் தன்ஷிகா, தமிழில் பெயரிடப்படாத சில படங்களில் நடித்து வருகிறார். வெப்தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தாலும், சினிமாவுக்கு முன்னுரிமை கொடுக்கும் அவர், தற்போது சென்னை சாலிகிராமம் பகுதியில் புதிய வீட்டில் குடியேறி இருக்கிறார்.

அந்த ராசியோ என்னவோ, தற்போது தன் உடல்நலம் மற்றும் மனநலம் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் புதிய படங்களில் நடிப்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியுள்ளார். ஒரு தமிழ் படத்தில் வக்கீல் வேடத்தில் நடிக்கும் அவர், ஓய்வு நேரங்களில் ஆன்மிகத்தில் மூழ்கிவிடுகிறார்.

Related Stories:

More