சுப்ரமணியபுரம், ஈசன் படங்களை இயக்கிய பிறகு நடிப்பில் அதிக கவனம் செலுத்தும் சசிகுமார், தற்போது கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய், எம்ஜிஆர் மகன், கத்துக்குட்டி சரவணன் இயக்கும் படம் என, பிசியாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் தயாரிப்பிலும் நடிக்க இருக்கிறார். அவர் கூறுகையில், ‘எம்ஜிஆர் மகன் படத்தில், எனது தந்தை எம்.ஜி.ராமசாமி என்ற வேடத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டிலில் எனது பெயருக்குப் பின்னால் சத்யராஜ் பெயர் இடம்பெற்றது. இது எனக்கு வருத்தத்தை அளித்தது.