காதல் கதையில் ரெபா மோனிகா

ராஜேஷ்குமார், ஸ்ரீவித்யா ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ள மழையில் நனைகிறேன் படத்தை டி.சுரேஷ் குமார் இயக்கியுள்ளார். யதார்த்தமான வாழ்வியலுடன் கூடிய மென்மையான காதலை சொல்லும் இப்படம், சென்னை உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.  படம் குறித்து டி.சுரேஷ் குமார் கூறுகையில், ‘இன்ஜினியரிங் படித்த பிராமணப் பெண்ணுக்கும், படித்துவிட்டு வேலை இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவ இளைஞனுக்கும் ஏற்படும் காதலும், அதன் விளைவுகளும்தான் கதை. காதலில் ஏதாவது பிரச்னை ஏற்படும்போது, காதலர்கள் காயப்பட வேண்டியிருக்கிறது அல்லது காதலர்களின் பெற்றோர்கள் காயப்பட வேண்டியிருக்கிறது. 

அது பற்றியும் இப்படம் பேசுகிறது. சண்டைக்காட்சி இருந்தாலும் வில்லன் இல்லை. ஹீரோயின் அறிமுக காட்சியும், இறுதிக்காட்சியும் மழையில் நடக்கும் என்பதால், மழையில் நனைகிறேன் என்று தலைப்பு சூட்டியுள்ளோம். தற்போது இப்படம் உலக திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் தியேட்டரில் படம் ரிலீசாகிறது’ என்றார். அன்சன் பால், பிகில் ரெபா மோனிகா ஜான், ராஜா நடித்துள்ளனர். கல்யாண் ஒளிப்பதிவு செய்ய, விஷ்ணு பிரசாத் இசை அமைக்கிறார். இயக்குனர் விஜி, கவின் பாண்டியன் வசனம் எழுதியுள்ளனர்.

Related Stories:

>