நீது சந்திராவுக்கு பிரியங்கா சோப்ரா அட்வைஸ்

ஹாலிவுட் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் நீது சந்திரா. நேவர் பேக் டவுன் என்ற படத்தில் அவர் நடிக்க உள்ளார். ஆக்‌ஷன் கதை படமான இதில், ஆக்‌ஷன் ஹீரோயினாகவே நீது சந்திரா நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆடிஷனுக்காக சமீபத்தில் அவர் அமெரிக்கா சென்று வந்தார். ஆடிஷனில் அவரது நடிப்பை பார்த்து டைரக்டர் கெல்லி மெடீசனுக்கு திருப்தியாம். பட டெக்னீஷியன்கள் சிலரும் நீதுவை பாராட்டியுள்ளனர். 2 நாளில் ஆடிஷன் முடிந்துவிட்டாலும் மேலும் சில நாட்கள் அமெரிக்காவிலேயே தங்கியிருந்தாராம் நீது. இதற்கு காரணம், தன்னை புரமோட் செய்துகொள்ளத்தானாம். 

ஏற்கனவே ஹாலிவுட்டுக்கு சென்ற பிரியங்கா சோப்ராவிடம்தான் இது பற்றி அட்வைஸ் கேட்டிருக்கிறார் நீது. அவர் கொடுத்த ஆலோசனைப்படி, அமெரிக்காவிலேயே தங்கி, சில இதழ்களுக்கு படு கிளாமராக போஸ்களை கொடுத்தாராம் நீது. இதற்காக சிறப்பு போட்டோ ஷூட்டையும் அவர் நடத்தினாராம். ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்கு முன் மீடியா மூலமாக ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆவது அவசியம் என பிரியங்கா அறிவுறுத்தி இருந்தாராம்.

Related Stories:

>