ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டான காந்தி நகரில் ஒன்று முதல் 6 தெருக்கள் உள்ளன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள எஸ்.எம்.ஆர் தெருவில் கடந்த 10 நாட்களாக சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்குள்ள சேதமான மின்கம்பத்தை மாற்றும்போது, காமராஜர் தெருவில் உள்ள சாலைகள் சேதமடைந்தன. மேலும், எஸ்.எம்.ஆர் மற்றும் காமராஜர் தெரு இணைப்பு பாலம் மழைநீர் கால்வாய் பணியின்போது இடித்து தள்ளப்பட்டது.இந்நிலையில், எஸ்.எம்.ஆர் தெருவில் மழைநீர் கால்வாய் பணிகள் முடிந்துள்ளன. இதைத் தொடர்ந்து, இங்குள்ள இணைப்பு பாலத்தை மெலிதான கம்பி கொண்டு தரமற்ற முறையில் நேற்று புதிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த இணைப்பு பாலப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக ஒப்பந்ததாரருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த பட்டாபிராம் போலீசார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. …
The post ஆவடி 18வது வார்டில் தரமில்லாமல் இணைப்பு பாலம் கட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.
