இளையராஜாவின் பாடல்தான் நவரசா கதை...! கௌதம் மேனன்

மணிரத்னம் தயாரிப்பில் நவரசா வெப்சீரிஸ், ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த ஆந்தாலஜி கதையை இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் இயக்கவுள்ளனர். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம், சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இதில் கௌதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் சூர்யா நடிக்கிறார், இதை பற்றி கௌதம் மேனன் கூறியதாவது: சூர்யாவுக்கு ஜோடியாக புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். இது காதல் கதை. இதில் இளையராஜாவின் ஒரு பாடலை பயன்படுத்த அனுமதி கொடுத்தார். அந்த பாடலை சுற்றித்தான் இந்த கதை இருக்கும். எனது படங்களின் கேரக்டர்களை போல், அதே இயல்பை இந்த வெப்தொடரின் கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம்.

Related Stories: