இந்தியில் அறிமுகமான நிதி அகர்வால், பிறகு தெலுங்கில் நடித்தார். இந்நிலையில் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த பொங்கலுக்கு ஜெயம் ரவியுடன் நடித்த பூமி படமும், சிம்புவுடன் நடித்த ஈஸ்வரன் படமும் ரிலீசானது. இவ்விரு படங்களும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கொடுக்கவில்லை என்றாலும், மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். தற்போது மகிழ்திருமேனி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கும் அவர், தற்போது ஒரு தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.