×

வேலுநாச்சியார் ஆகிறார் நயன்தாரா

சுசிகணேசன் இயக்கும் படத்தில் வேலுநாச்சியாராக நயன்தாரா நடிக்க உள்ளார். விரும்புகிறேன், பைவ் ஸ்டார், திருட்டுப் பயலே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சுசிகணேசன். அவர் அடுத்ததாக 17ம் நூற்றாண்டில் சிவகங்கை சீமையை ஆண்ட வேலுநாச்சியார் கதையை படமாக்க ஆய்வில் ஈடுபட்டுள்ளார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடியவர் வேலுநாச்சியார். அவரது கதையில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். விரைவில் இந்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags : Velunacharya ,Nayanthara ,
× RELATED விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்த...