திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கோரி நடிகர் விஜய் முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா பரவலால் படத்தை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. ஊரடங்கு தளர்வு காரணமாக திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித்குமார் ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் நேற்று இரவு சந்தித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விஜய் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

Related Stories:

>