×

விநியோகஸ்தர் ஆனார் நயன்தாரா

நடிகை நயன்தாரா நெற்றிக்கண் என்ற படத்தின் மூலம் ஏற்கனவே தயாரிப்பாளராகி விட்டார். இதில் அவரே நடிக்கிறார். அவரது காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து தொடங்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் மூலம் தொடர்ந்து பட தயாரிப்பில் இறங்கி உள்ளார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில் அவருடன் விஜய்சேதுபதி, சமந்தா நடிக்கிறார்கள்.இந்நிலையில் விநியோகஸ்தராகவும் ஆகியிருக்கிறார்.

தயாரித்து முடிக்கப்பட்ட சிறுபட்ஜெட் படங்களை வாங்கி வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளார். அந்த வகையில் வசந்த் ரவி, ரவீணா நடித்த ராக்கி என்ற படத்தை வாங்கியுள்ளார். இதனை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் என்ற புதுமுகம் இயக்கி உள்ள கூழாங்கல் என்ற படத்தையும் நயன்தாரா வாங்கி வெளியிடுகிறார். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ‘தனித்துவமான கதைகளை நயன்தாரா தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

Tags : Nayanthara ,distributor ,
× RELATED விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்த...