நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, தேவ் ஆகிய படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத் சிங். இந்தி, தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் அயலான் படத்தின் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார். பின்னர் இந்தி படத்தின் படப்பிடிப்புக்காக மும்பை சென்றிருந்தார். அங்கு காய்ச்சலால் அவதிப்பட்ட ரகுல், கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு கொரோனோ தொற்று உறுதியானது.