×

கொரோனாவால் கிடைத்த பட வாய்ப்பு: மாளவிகா பூரிப்பு

கொரோனாவால் தனக்கு பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறுகிறார் மாளவிகா மோகனன். அவர் கூறியது: கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடிக்கிறேன். இந்த படத்தில் நடிக்க கொரோனாவுக்கு முன்பே என்னிடம் கேட்டனர். அப்போது 3 படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தேன். அதனால் தனுஷ் படத்தில் நடிக்க முடியாத சூழல். இந்நிலையில்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நான் கமிட் செய்த 3 படங்களின் படப்பிடிப்பும் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போனது. திடீரென தனுஷ் படக்குழு மீண்டும் பேசியபோது, இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன். கொரோனா காரணமாக அந்த படங்கள் தள்ளிப்போனதும் தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்துவிட்டது. இவ்வாறு மாளவிகா மோகனன் கூறினார்.

Tags : Corona ,Malavika Boom ,
× RELATED இந்தியன் 2 பட பிரச்சனை குறித்து லைகா...