செங்கல்பட்டில் 2 தரைப்பாலம் மூழ்கியது: 10 கிராம மக்கள் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பாலூர் அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் பணிக்காக நாள்தோறும் செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, ரெட்டிப்பாளையத்தில் உள்ள 2 தரைப்பாலங்கள் வழியாக சென்று வருவது வழக்கம். மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் ரெட்டிப்பாளையத்தில் உள்ள 2 தரைப்பாலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை பல்வேறு பணிகளுக்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டு மழையின்போதும் ரெட்டிப்பாளையம் சாலை மழைநீரால் துண்டிக்கப்படுகிறது. இங்கு தற்காலிக தரைப்பாலம் இருந்தாலும், தற்போது அதையும் தாண்டி மழைநீர் வெள்ளமாக செல்கிறது. தற்போது 2 தரைப்பாலங்களும் மழைநீர் வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதால், இப்பகுதி மக்கள் சுமார் 10 கிமீ தூரம் சுற்றி வரவேண்டிய அவலநிலை உள்ளது. இங்கு நிரந்தரமாக மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்….

The post செங்கல்பட்டில் 2 தரைப்பாலம் மூழ்கியது: 10 கிராம மக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Related Stories: