×

கோரிக்கைகளை தியேட்டர் அதிபர்கள் ஏற்காவிட்டால் ஓடிடியில் படம் ரிலீஸ் செய்வோம்: பாரதிராஜா திட்டவட்டம்

பாரதிராஜா தலைமையில் இயங்கும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு பிறகு சங்க தலைவர் பாரதிராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு தற்போது படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளது. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட படங்களை நடித்து முடித்து விட்டே நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அடுத்த படத்திற்கு செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

ஆன்லைன் டிக்கெட் கட்டணத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு, படம் திரையிட டிஜிட்டல் கட்டணத்தை தியேட்டர்களே ஏற்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தியேட்டர் அதிபர்களிடம் வைத்துள்ளோம். தியேட்டர்களில் படத்தை வெளியிடத்தான் விரும்புகிறோம். அவர்கள் எங்கள் கோரிக்கையை நிராகரிக்கும் பட்சத்தில் எங்களுக்கும் வேறு வேறு திசைகள் இருக்கிறது. எங்கள் பொருளை எங்கே விற்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தியேட்டர் அதிபர்களுக்கு தொழில் சுதந்திரம் இருப்பது போல் எங்களுக்கும் தொழில் சுதந்திரம் இருக்கிறது. ஓடிடி என்பது எங்களுக்கு மாற்றுவழி. எங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஓடிடியை நோக்கி செல்வோம் என்றார்.

Tags : theater principals ,
× RELATED திரையுலகம் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு...