×

மது அருந்த கற்றுத் தரும் நடிகை: நெட்டிசன்கள் கடும் தாக்கு

பாலிவுட் மற்றும் கன்னட சினிமாவில் போதை மருந்து கடத்தல், பயன்பாடு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய குற்றப் பிரிவு போலீசாரும், போதை மருந்து கடத்தல் தடுப்பு பிரிவினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இது தொடர்பாக பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா, தான் மது அருந்தும் படத்தை வெளியிட்டு, அந்த மதுவில் என்ன கலந்து குடிக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். ‘50 மில்லி ஜானி வாக்கருடன் 120 மில்லி இஞ்சி சாறு, ஒரு துண்டு ஆரஞ்சு பழம், ஆகியவற்றை கலந்து குடித்தால் மகிழ்ச்சி பொங்கும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த படமும், விளக்மும் இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இஷா குப்தா யோகா நிபுணர் என்பதும், யோகா வகுப்புகள் எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த பதிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘சமூகவலைத்தளத்தில் உங்களை பின்பற்றும் இளைஞர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுப்பது இதுதானா’ என கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : Actress ,Netizens ,
× RELATED முழு நடிகையாக ஏற்றுக்கொள்ள கூச்சமாக இருந்தது!