கைவிடப்பட்டதா சூர்யா படம்?

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படம், லாக்டவுன் முடிந்த பிறகு ரிலீசாகிறது. இந்நிலையில் அவர் இரு புதுப்படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். ஒன்று, வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாடிவாசல் படம். இன்னொன்று, ஹரி இயக்கத்தில் நடிக்கும் அருவா படம். இதில் அருவா என்ற தலைப்புக்கு ஆரம்பத்திலேயே சிக்கல் ஏற்பட்டது. இது தங்கள் படத்தின் தலைப்பு என்று ஒரு படக்குழு போர்க்கொடி தூக்கியது. எனினும், அருவா தலைப்பு மாற்றப்படவில்லை. இந்நிலையில், வாடிவாசல் படத்துக்காக வெற்றிமாறன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்து பாடல் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

எனவே, முதலில் இந்தப் படத்தின் ஷூட்டிங் ெதாடங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், ஹரி சொன்ன அருவா கதை தனக்கு பிடிக்கவில்லை என்றும், அதை மாற்றும்படியும் சூர்யா தரப்பில் கூறியதாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால், அருவா படம் கைவிடப்படும் நிலையில் இருப்பதாகவும் அந்த தகவல்களில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து சூர்யா தரப்பில் விசாரித்தபோது, ‘இது லாக்டவுன் நேரம். எப்போது முடியும், எப்போது ஷூட்டிங் தொடங்கும் என்றே தெரியாத நிலையில், இதுபோன்ற வதந்திகளை யார் பரப்புவது என்று தெரியவில்லை. அருவா திட்டமிட்டபடி நடக்கும்’ என்று சொல்லப்பட்டது.  

Related Stories: