உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா; 45 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்,  சாலவாக்கம் ஒன்றிய இளைஞரணி சார்பில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழா சாலவாக்கம் கிராமத்தில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் முன்னிலை வகித்தார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்றார். சாலவாக்கம் கிராமம் திமுக கொடிகளாலும் தோரணத்தினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 45 கிலோ கேக் வெட்டி  சிறுவர், சிறுமியர், ஏழை, எளியவர்களுக்கு எம்எல்ஏ  க.சுந்தர் வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் பேசுகையில், “உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். இளைஞர்கள்  தங்களால் முயன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடவேண்டும். நிர்வாகிகள்  கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், ஒன்றிய நிர்வாகிகள் என்.எஸ்.ரவி, ஞானசேகர், தமிழ்வேந்தன், சுஜாதா, பாலமுருகன்,  பாண்டியன், பாபு ஷரீப், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், மணி, முரளி, விஷ்ணு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள்  துரைவேல், சேகர், கல்யாணசுந்தரம், நதியா கோபி, சுப்பிரமணி, அன்புராஜ்,  ஊராட்சி மன்ற தலைவர் சத்யா சக்திவேல் மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,  இளைஞரணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா; 45 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்: க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: