சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம் வாழ்க்கை சினிமா படமாகிறது. ஆங்கிலத்தில் வெளியான அவரது வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை படித்த அமிதாப் பச்சன், ‘கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை என்னை நெகிழ வைத்தது. அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் நானே நடிக்கிறேன். இளமைக்கால கேரக்டரில் என் மகன் அபிஷேக் பச்சன் நடிப்பார்’ என்று, பாலிவுட் தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் கூறியுள்ளார்.