மீம்ஸ் போடச் சொல்லி இயக்குனரை மிரட்டிய நடிகை

மான்ஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீகணேஷ் இயக்குகிறார். இவர் எட்டுதோட்டாக்கள் படத்தை இயக்கியவர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, சந்தானம் போன்ற நகைச்சுவை நடிகர்களை வைத்து பல்வேறு மீம்ஸ்கள் வருகின்றன. இதற்காக மீம்ஸ் கிரியேட்டர்ஸ் என்ற ஒரு குரூப் வேலை செய்கிறது.

புதிதாக வரும் படங்கள் பற்றியும் மீம்ஸ் வருவதுண்டு. ஆனால் தன் படத்துக்கு தானே மீம்ஸ் கிரியேட் செய்து பரப்புகிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். குருதி ஆட்டம் படத்துக்காக அவர் ஒரு மீம்ஸ் வெளியிட்டு, எனக்காக ஒரு மீம்ஸ் பண்ணுங்க.. என்று பட ஹீரோயின் பிரியா பவானி சங்கர் தன்னை மிரட்டியதாக கூறி உள்ளார்.

ரஜினி, நக்மா நடித்த பாட்ஷா படத்தை வைத்து இந்த மீம்ஸை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீகணேஷ். ரஜினியின் ஆட்டோவில் நக்மா ஏறி ஜனகராஜுக்கு டாட்டா காட்டிவிட்டு செல்வதுபோல் இந்த மீம்ஸ் போடப்பட்டிருக்கிறது. அதில் பிரியா பவானி ஷூட்டிங் போறோம் பை என்ற கூறுவதுபோல் மீம்ஸை பதிவிட்டிருக்கிறார் இயக்குனர்.

Related Stories: